Skip to main content

டிஎன்சிஎஸ்சி பாரதிய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

 

 

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎன்சிஎஸ்சி பாரதிய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பாரதிய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

இச்சங்கத்தின் மாநில தலைவர் சிதம்பரசாமி மற்றும் மாநில செயலாளர் டி.நாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தென்பாரத பி எம் எஸ் அமைப்பு செயலாளர் துரைராஜ் மற்றும் டிஎம்எஸ் மாநில பொதுச்செயலாளர் விமலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

 

ஆர்ப்பாட்டத்தின் போது, டிஎன்சிஎஸ்சி நிறுவனத்தை கூட்டுறவுத்துறைக்கு தாரைவார்க்காதே!  டிஎன்சிஎஸ்சியில் கூட்டுறவுத்துறை பணியாளர்களை பணி நியமனம் செய்யாதே! டிஎன்சிஎஸ்சி ஊழியர்கள் அனைவருக்கும் அரசின் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி குறைந்தபட்ச பென்ஷன் ரூபாய் 10 ஆயிரம் வழங்கிடு! பஞ்சப்பாடி நிலுவை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு எல்டிசி சலுகைகளை உடனடியாக வழங்கிடு! 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பணிபுரிந்து வரும் நெல் கொள்முதல் பணியாளர்கள் அனைவரையும் காலியாக உள்ள சுமார் 1500 பணியிடங்களில் நிரப்பி கழகப் பணியாளர்களின் பணி சுமையை குறைத்திடு உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !