Advertisment

சிதம்பரத்தில் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Protest on behalf of the Minority People's Welfare Committee in Chidambaram

சிதம்பரத்தில் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

இதற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜின்னா தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் மூசா, மாவட்டக்குழு அஷ்ரஃப் அலி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு காஷ்மீரில் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளோரை விடுதலை செய்ய வேண்டும். எந்தவிதகுற்றமும் நிரூபிக்கப்படாமல் விசாரணை கைதிகளாக பல ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சிறுபான்மையினர் கல்வி உரிமையைப் பறிக்கும் புதிய கல்விக் கொள்கையை வாபஸ் வாங்கவேண்டும். CAA எதிர்த்து போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை கைவிட்டு கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும். சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு எதிரான NEP ஐ கைவிட வேண்டும்.CAA - NPR - NRC ஆகிய சட்டங்களை வாபஸ் வாங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Advertisment

CHITHAMPARAM
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe