புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அவ்வழியே கடந்து செல்லும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

Advertisment

protest against the unfinished railway bridge

இதனிடையே பாலம் கட்டுவதாக சொல்லியும், தொடர்வண்டி பாதையை காரணம் காட்டியும் வில்லியனூர் வழியை அடைத்ததால், அந்த பகுதி மக்கள் சுடுகாட்டிற்கு சடலங்களை எடுத்து செல்வதற்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

Advertisment

அதையடுத்து சுடுகாட்டுக்கு பாதை கோரி அப்பகுதி மக்கள் சவப்பாடை ஊர்வலமும் போராட்டமும் நடத்தினர். அதில் சமூக அமைப்பினரும், பொதுமக்களும் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.

உடனடியாக அரும்பார்த்தபுரம் மேம்பாலத்தை பணியை முடிக்க வேண்டும் என்றும், சுடுகாடு செல்லும் வழியை சீரமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கும் அப்பகுதி மக்கள் அடுத்தகட்டமாக பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தனர்.

Advertisment