Advertisment

மத்திய மாநில அரசுக்கு எதிரான போராட்டம்... போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு...!

மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய , மாநில அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Advertisment

protest against admk and bjp

மதுரையில் தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பு , மத்திய மாநில அரசை கண்டித்தும், பொதுதுறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குவது , புதிய ஓய்வூதியதிட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் சிஐடியு , இந்திய மாணவர் சங்கம் , சி.பி.ஐ.எம்.எல் , ஜனநாயக மாதர் சங்கம் , சி.பி.எம் , எஸ்.யு.சி.ஐ உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பங்கேற்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்ய முயற்சித்த போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment
admk protest
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe