Advertisment

பிரதிபாவின் உடற்கூராய்வுக்கு எதிர்ப்பு - போராட்டம் நடத்தியவர்கள் கைது

pi

Advertisment

நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியால் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி பிரதிபா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள பிரதீபாவின் உடலை உடற்கூராய்வு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும் என திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது உங்க பிரச்சனைகளை எல்லாம் உங்கள் மாவட்டத்தில் போய் வைத்துக்கொள்ளுங்கள் என்கிற ரீதியில் கருத்து கூறியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதனால் அதிரடியாக அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் 200 அதிரடி போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், செஞ்சி எம்.எல்.ஏ. மஸ்தான் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவர் பிரதீபாவின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் மூன்று கோரிக்கைகளை வைத்தனர். நீட் தேர்வினை கைது செய்ய வேண்டும், 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும், பிரதீபாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்தனர். உடனே அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையாக வைத்தனர். கோரிக்கையை நான் அரசுக்கு தெரியப்படுத்துகிறேன் என்று கூறிச்சென்றார் ஆட் சியர் கந்தசாமி.

Advertisment

இதற்கிடையில் வேலூர் மண்டல டிஐஜி வனிதா திருவண்ணாமலை வந்தார். அவர், செஞ்சி எம்.எல்.ஏ மஸ்தான், விசிகவினர், தினகரன் அணியின் முக்கிய நிர்வாகிகளிடம் போஸ்ட்மார்ட்டம் நடக்கட்டும், அதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்றார். எம்.எல்.ஏவோ, பிரதீபா தொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளஎன். அதுவரை போஸ்ட் மார்டம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றனர். இதனை உடனடியாக மருத்துவமனை முன்வாயில் பூட்டப்பட்டது. அரசியல் கட்சியினர் அதிரடியாக அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Pratibha protest
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe