தமிழ்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தியதை கண்டித்து சிதம்பரத்தில் தமிழ்தேசிய பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசே கவல்துறையே தமிழக மக்களுக்காக போராடும் தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடு, மணியரசனை தாக்கியவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடை உள்ளிட்ட தமிழக அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் திருவரசு உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழ்தேசிய பேரியக்க நிர்வாகி குபேரன், எள்ளாளன் உள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.