Advertisment

கெயில் குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு... போராட்டதிற்கு தூண்டியதாக ஒருவர் கைது

விவசாய விளைநிலத்தில்கெயில் குழாய் பதிப்பதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

"ஹைட்ரோ கார்பன் திட்டம் என்கிற பெயரில் மண்ணையும், அதில் விளையும் பயிரையும், அதை நம்பியிருக்கும் மக்களையும் அழித்தொழித்து விட்டு, யாருக்காக ஆட்சி நடத்தப் போகிறார்கள்," என்கிற கோபக் குரல் டெல்டா மாவட்டங்களில் ஓங்கி ஒலிக்கத் துவங்கி இருக்கிறது.

Advertisment

POLICE

நாகை மாவட்டம் மாதனம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோமீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் எண்ணெய் எரிவாயு எடுத்துச் செல்வதற்காக, நடவுகளையும், பருத்திகளையும் அழித்துக்கொண்டு, குழாய் பதிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறனர். அதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு தரங்கம்பாடி தாலுகா பகுதியில் கோடை சாகுபடி செய்திருந்த நாற்றங்கால் பகுதியை நாசம் செய்து குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. இதை தெரிந்துகொண்ட விவசாயிகள் தடுத்துநிறுத்தி செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மயிலாடுதுறை டி.எஸ்.பி வெள்ளத்துரை தலைமையில் வந்த போலீசார் நடவு வயலை நாசம் படுத்தக்கூடாது என்றுகூறி வேலையை தற்காலிகமாக நிறுத்தினர். அதேபோல் காலகஸ்திநாதபுரம் பகுதியில் குறுவை சாகுபடிக்காக விதை விட்டிருந்த நிலத்திலும், உழவு செய்த வயல்களிலும் குழாய் பதிப்பதற்கு இயந்திரங்களை இறக்கி நாசம் செய்தனர். அதற்குகிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, போலீசிலும் புகார் அளித்தனர்.

POLICE

அதோடு நிலம் நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் தலைமையில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் போராட்டத்தில் தலைமை வகித்தஇரணியன், போராட்டத்தில் ஈடுபட்டதற்கும் மேலும் போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்த முயன்றதாகவும்கூறி அவரைகைது செய்துள்ளது செம்பனார்கோவில் காவல்துறை. தற்போது கைது செய்யப்பட்ட இரணியனைமயிலாடுதுறை காவல்நிலையத்தில்வைத்துள்ளனர்.

POLICE

மேலும் யாராவது போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களையும் கைது செய்துவிடுவோம் என காவல்துறையினர் எச்சரித்ததாக அப்பகுதி விவசாயிகள் கூறியுள்ளனர். அதேபோல் ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்ட நிலையில் 10000 ரூபாய் மட்டுமே வழங்குவதாகவும் மீறி கேட்டால்போலீசாரை வைத்து மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

arrest protest gail-pipeline
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe