தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி சில நாட்களுக்கு முன்பு ஜி.கே.வாசனின் த.மா.கா, பாரதிய ஜனதாவுடன் இணைவது தற்கொலைக்கு சமம். அதற்கு பதிலாக தமாகாவினர் தாய் இயக்கமான காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் சிலர் ஆங்காங்கே எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

erode

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் இன்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள ரவுண்டானாவில் ஈரோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ் தலைமையில் தமாகாவினர் திரண்டனர். பின்னர் அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அடுத்து திடீரென அழகிரி உருவப்படத்தை தீயிட்டுக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. த.மா.க. இளைஞர் அணி தலைவர் யுவராஜா வின் சொந்த ஊர் ஈரோடு என்பதால் யுவராஜாவின் இருப்பை காட்ட பத்து இளைஞர்களை அனுப்பி இந்த சிரிப்பு போராட்டத்தை யுவராஜா செய்துள்ளார் என்றனர் ஈரோடு காங்கிரஸ் கட்சியினர்.