Advertisment

தீ பந்தத்தோடு களத்தில் குதித்த மாணவர்கள்..! குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து சென்னையில் போராட்டம்.(படங்கள்)

குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் மூன்று பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. பின்னர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதேபோல் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்திலும் போலீசார் தடியடி நடத்தினர்.

Advertisment

தொடர்ந்து குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்தும் டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் தமிழகத்திலும் பல இடங்களில் மாணவர்கள் போராடி வருகின்றனர். நேற்று(16.12.2019) இரவு சென்னையில் உள்ள சேப்பாக்கம் பகுதியில் மாணவர்கள் கையில் தீ பந்தத்தை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

students protest protest Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe