Protest

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மெரினாவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வந்த தகவலின் பேரில் இன்று காலையிலேயே போலீசார் குவிக்கப்பட்டனர். சென்னை-மெரினாவில் கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்ற நிகழ்வை தவிர்க்க காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Protest

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை மெரினாவில் போராட்டம் நடத்துவதுபோன்று புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. பின்னர் வீடியோவும் வெளியானது. இந்த புகைப்படங்கள், வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, போராட்டம் நடத்திய அமைப்பு எது, வெளியிட்டவர்கள் யார், எந்த இடம் என்று விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisment

வீடியோ மற்றும் புகைப்படங்கள் வேகமாக பரவியதும் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் புகைப்படத்தில் இருந்தவர்கள் மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் பின்பு போராட்டம் நடத்தியதை பார்த்த போலீசார் ஆண்கள், பெண்கள் என 15 பேரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், வேடிக்கை பார்க்கும் தமிழகமே வீதிக்கு வந்து போராடு, விவசாயிகளை காப்பாற்றுவதற்காகத்தான் போராடுகிறோம். அனைத்து தரப்பினருக்கும் சேர்த்துதான் போராடுகிறோம். எங்களை கைது செய்யும் காவல்துறையினருக்கும் சேர்த்துதான் போராடுகிறோம் என்றனர்.