Advertisment

'சொத்து வரி- ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும்' - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

property tax incentives chennai corporation dmk mk stalin

Advertisment

சொத்து வரி செலுத்துவோருக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியைதி.மு.கதலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரையாண்டு சொத்து வரியாக ரூபாய் 5 ஆயிரத்துக்குள் செலுத்தும் நபர்களுக்கு ஊக்கத்தொகையை 10 சதவீதமாக அதிகரியுங்கள். அரையாண்டு முடிந்து சொத்து வரி செலுத்துவோருக்கான ஊக்கத்தொகை கால அவகாசத்தை 45 நாளாக அதிகரியுங்கள். அரையாண்டு முடிந்து 15 நாளில் சொத்து வரி செலுத்தும் நபர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. அப்படிச் செலுத்தத் தவறினால் 16- ஆவது நாளில் இருந்து 2 சதவீத அபராதம் வசூல் என்று மாநகராட்சி கூறியுள்ளது. வலது கையால் ஒரு சலுகையைக் கொடுத்து விட்டு, இடது கையால் பறித்துக் கொள்வது போல் அறிவிப்பு இருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

property tax chennai corporation
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe