
திருச்சி மாவட்டம், உறையூர் பாக்குபேட்டை பகுதியில் அசாருதீன் (25) என்பவர் வசித்துவருகிறார். இவர், அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் முதல் தளத்தில் வசித்துவருகிறார். அதே வீட்டில் இவரின் உறவினரான சிராஜ்தீன் (54) என்பவர் கீழ் தளத்தில் வசித்துவருகிறார்.
இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்துவந்துள்ளது. இந்நிலையில், நேற்று (24.11.2021) மீண்டும் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அது முற்றி கைகலப்பாக மாறியது. இதில் சிராஜ்தீன், அன்சால் சல்மா மற்றும் இவரது பிள்ளைகள் எல்லாம் இணைந்து அசாருதீனை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து, அசாருதீன் உறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரை ஏற்ற உறையூர் காவல்துறையினர், சிராஜ்தீன் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதேபோல அன்சால் சல்மா கொடுத்த புகாரின் பேரில் அசாருதீன், நர்கீஸ் பானு (41), பேகம் (45), மல்லிகா பானு (42) ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.