Property documents missing actor Ramki complains

Advertisment

தனது வீட்டில் வைத்திருந்த அசல் சொத்து ஆவணங்கள் காணவில்லை என நடிகர் ராம்கி போலீசில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமா திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம்கி. இவர் சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது வீட்டில் வைத்திருந்த வீட்டின் அசல் சொத்து ஆவணங்களைக் காணவில்லை என்றும், காணாமல் போன ஆவணங்களைகண்டுபிடித்துத்தரவேண்டும் என்றும் நடிகர் ராம்கி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தேனாம்பேட்டை போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.