காஜா புயலால்பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இது தொடர்பாக இன்றுஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலால்45 பேர் உயிரிழந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது.45 பேர் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால்56,942 குடிசை வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 30,328 ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர்அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 103 மாடுகள், 633 ஆடுகள் உயிரிழந்துள்ளதாகவும்அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சேதமடைந்த பகுதிகளை சீர்செய்யும் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறியுள்ள முதல்வர்,திருவாரூர், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு கூடுதல் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து காஜா புயல் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.