Advertisment

ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு!

Promotion for IAS officers

Advertisment

5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கி தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், ”மணிவாசன் ஐஏஎஸ் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகப்பதவி உயர்வு பெற்றுள்ளார். ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் சுகாதாரத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். தீரஜ்குமார் ஐஏஎஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். விஜயகுமார் ஐஏஎஸ் நகர்ப்புற கட்டமைப்பு நிதியத்தின் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். சுனில் பாலிவால் ஐஏஎஸ் சென்னை துறைமுக ஆணையத்தின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் மூலம் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவர்கள் பணியாற்றி வரும் அதே துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர் தகுதியில் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

transfer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe