Promotion of eight IAS officers in Tamil Nadu

தமிழகத்தில் எட்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கூட்டுறவுத்துறை செயலாளராக உள்ள ராதாகிருஷ்ணனுக்குக் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜேந்திரகுமார், நீரஜ் மிட்டல், ராஜேஷ் லகானி உள்ளிட்ட எட்டு பேருக்கு கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை செயலாளராக உள்ள ராதாகிருஷ்ணன் ஏற்கனவே மருத்துவத்துறை செயலாளராக இருந்து பின்னர் கூட்டுறவுத்துறை செயலாளராக மாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.