Advertisment

தாய் மீது சத்தியம்.. காட்டிக் கொடுக்க மாட்டேன்.. திருடிய வண்டியை கொடுத்துட்டு பணத்தை வாங்கி போங்க... திருடர்களுக்கு துண்டறிக்கை மூலம் கோரிக்கை!!

Request by pseudonym for thieves

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிராமத்தில் கடந்த 26 ந் தேதி அதிகாலை வீ.சிவசங்கரன் சுவாமிகள் வீட்டு வாசலில் நின்ற டிவிஎஸ் சூப்பர் எக்செல் வண்டியை காணவில்லை..அந்த பைக்கை கண்டுபிடிக்க சிவசங்கரன் தன் பைக்கை திருடிய திருடர்களுக்கு அன்பான வேண்டுகோல் வைத்து ஒரு துண்டறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த துண்டறிக்கையில்..

கடந்த 26.8.2017 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவல் என் வீட்டுவாசலில் நின்ற சூப்பர் எக்ஸல் வண்டியை அன்புத் தம்பிகள் பணத்தேவைக்காக எடுத்துச் சென்றுவிட்டார்கள்.

அந்த வண்டியை எடுத்தவர்கள் என்னிடம் தனிமையில் சந்தித்து உங்களுக்கு வேண்டிய பணத்தை என்னிடம் பெற்றுக் கொள்ளலாம். நான் இதை யாரிடமும் சொல்லமாட்டேன். இது என் தாய் உஜ்ஜயினி மீது ஆணை..

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இது மணமேல்குடி மக்கள் 2014 ல் பரிசாக கொடுத்த வண்டி.. தம்பிமார்கள் என் மீது இரக்கம் காட்டி ஆசையை நிறைவேற்ற வேண்டுகிறேன் என்று அந்த துண்டறிக்கையில் தனது செல்போன் எண்ணையும் பதிவிட்டுள்ளார்.

இந்த துண்டறிக்கை சமூகவலைதளங்களில் வேகமாக பரவுகிறது..

Pudukottai Robbery
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe