Prolonged raid ... 2.65 crore rupees confiscated from places owned by KP Anpalagan!

Advertisment

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை செய்து வருகிறார்கள். இவர் மீது பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தொடர் புகார்கள் வந்ததையடுத்து இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காலையில் தொடங்கிய இந்தச் சோதனை தற்பொழுது வரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்தச் சோதனையில் இதுவரை 2.65 கோடி ரூபாய் பணம், 6.637 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதேபோல் வங்கி பெட்டக சாவி, வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.