Skip to main content

இறால் குஞ்சு பொரிப்பகதிற்கு தடை-கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

Published on 26/01/2020 | Edited on 26/01/2020

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகாவில் உள்ள மரக்காணம் ஒன்றியத்தில் கீழ்பேட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் மீனவ குப்பத்தில் இறால் குஞ்சு பொரிப்பகத்திற்கு தடைசெய்ய கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் முடிவுசெய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

Prohibition on shrimp farming- Resolution at the village council meeting


இதனால் குடிநீர் உப்புநீராக  வருவதாகவும் அதிலிருந்து வரும் கழிவால் புற்றுநோய் உட்பட ஏற்படுவதால் இதனால் எண்ணற்ற நோய் வகைகள் பரவுகிறது. 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புற்றுநோய் பல்வேறு மர்ம நோய்கள் ஏற்பட்டு அவதிப்படுவதால் நிறுவனங்களை தடை செய்ய கோரியும், கிராமத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் அனைத்து மக்களும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்வது என கூட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆகியோர் தீர்மானம் நகல் வழங்கப்பட்டு, 19 மீனவர் கிராமத்தில் இறால் குஞ்சு பொரிப்பகத்தை தடைசெய்ய ஒட்டுமொத்தம் கிராம சபை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதுபோல் இதில்,  செட்டி குப்பம், செட்டி நகர், கூனிமேடு, ரங்கநாதபுரம், மஞ்சக்குப்பம், கீழ்புத்துப்பட்டு, முதலியார்குப்பம் ஆகிய 19 மீனவ கிராமங்களில் இறால் பொரிப்பகம் கம்பெனிகளுக்கு தடை செய்வது என தீர்மானம் போடப்பட்டது.  மரக்காணம் வட்டாட்சியரிடம்  இந்தத் தீர்மான  நகல் வழங்கப்பட்டது. இது சம்பந்தமாக  நடவடிக்கை இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் கிழக்கு கடற்கரை  சாலையில் செய்யப்படும் என கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது.     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.