
தமிழ்நாட்டில் கரோனாதொற்று எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், செப். 1ஆம் தேதி முதல் 9,10,11,12 வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைஎடுத்துவந்த நிலையில், தற்பொழுது பள்ளி திறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் வரும் செப்.15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை பகுதிகளுக்குசெல்லபொதுமக்களுக்குஅனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல்விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம்நடத்தவும் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதிகள், தனியார் விடுதிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமய விழாக்களை முன்னிட்டு மதம் சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்களுக்குத்தடை தொடர்கிறது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து விழா கொண்டாட அரசு தடை விதித்துள்ளது. விநாயகர் சிலைகளை இல்லங்களிலேயே வைத்துக் கொண்டாட தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் விநாயகர் சிலைகளை தனி நபர்களாக சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மரிய அன்னை பிறந்தநாள் திருவிழாவிற்கு பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்களில்அரசின் கட்டுப்பாடுகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விழாவிற்கான பொருட்களை வாங்கும் மக்கள் முக கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியுடன் பொருட்களை வாங்க வேண்டும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மத வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து என்ற உத்தரவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us