Advertisment

'மேம்பாலப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை சரிதான்' - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

'Prohibition imposed on flyover works is correct'- Madurai High Court orders

மதுரையில் 350 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாலப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை சரிதான் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

மதுரையைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். மதுரையில்இரண்டு கண்மாய்களைப்பாதிக்கும் வகையில் 350 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் இருக்கக்கூடிய முக்கியமான நீர் ஆதாரத்தின் மேல் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே இதற்குத்தடை விதிக்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த நிலையில், ஜி.ஆர்.சாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. இரண்டு மேம்பாலப் பணிகளுக்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் நீதிபதி புகழேந்தி பணிகளைத்தொடரலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Advertisment

இந்தநிலையில் இந்தமாறுபட்ட உத்தரவுகளைத்தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தனர். தலைமை நீதிபதியான தண்டபாணி முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், கண்மாய்களை அழிக்கும் வகையில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. நீர்த்தேக்கம் அதிகரிக்கப்படும் எனத்தெரிவித்தார்.அதைப் பதிவு செய்த நீதிபதி தண்டபாணி, பாலம் கட்டுவதற்கு முன்பாக இருந்த கண்மாய்களின் பரப்பளவு மற்றும் நீர்த்தேக்க பரப்பளவு குறித்து விவரங்களைக் கேட்டார். ஆனால் அதற்கு அரசு தரப்பில் எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து 350 கோடி ரூபாய் மேம்பாலப் பணி திட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி கொடுக்க இயலாது. இந்த வழக்கில் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கவும் விரும்பவில்லை. நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் இடைக்காலத்தடை உத்தரவு கொடுத்திருக்கிறார். அந்த உத்தரவுக்கு நான்பொருந்துகிறேன் எனத்தெரிவித்து, மீண்டும் இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விற்குப்பட்டியலிட உத்தரவிட்டார்.

highcourt Bridge madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe