கனரக வாகனங்கள் செல்ல தடை; அமலுக்கு வந்த அறிவிப்பு

Prohibition of heavy vehicles; Notice in effect

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக கனரக வாகனங்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு தாம்பரம் மாநகர காவல்துறை அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்படி அந்த தடை உத்தரவானது இன்று முதல் அமலுக்கு வர இருக்கிறது. இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 10 மணி வரையும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Chengalpattu lorry traffic vandalur
இதையும் படியுங்கள்
Subscribe