பெரும்பாலான டீக்கடைகளில் பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட எண்ணெய் பண்டங்களை அச்சிட்ட பேப்பர்களில் வைத்து வழங்குவது வாடிக்கை. இதனால் உடல் உபாதைகள் ஏற்படும் என்ற நிலையிலும் இந்த நடைமுறை பெரும்பாலும் அதிகமாகவே நடக்கிறது. இந்நிலையில் பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட எண்ணெய் பண்டங்களை அச்சிட்ட பேப்பர்களில் வைத்து வழங்கக்கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தடையை மீறி உணவுப்பொருட்களை அச்சிட்ட பேப்பரில் வழங்கினால் அபராதம் விதிக்கப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரித்துள்ளார்.