அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது.
சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை அதிமுக சட்டப்பேரவை கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கடந்த 26 ஆம் தேதிகாலை தலைமைச் செயலகத்தில் சந்தித்துதினகரன் அணியில் பொறுப்பில், பதவியில்கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர்இருக்கிறார்கள். மேலும், டிடிவி தினகரனோடு 3 பேரும் இருக்கும் புகைப்பட ஆதாரங்கள் இருப்பதாகவும்
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதிமுகவுக்கு எதிராக கட்சி விரோத செயல்களில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் ஈடுபட்டுள்ளார்கள்எனவே3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருந்தார்.
அதனையடுத்து சபாநாயகர் தனபால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டிஸில் மூன்று பேரும் 15 நாட்களுக்குள் இதுதொடர்பாகவிளக்கமளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த நோட்டீசை அடுத்துதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுக சார்பில்சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மனு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வில் திமுக முறையிட்டது.திமுகவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் திங்கள் கிழமை வழக்கை விசாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.