Prohibited tobacco seller arrested

Advertisment

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு டவுன் போலீசார்கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கச்சேரி வீதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில், அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்துபோலீசார், கடை உரிமையாளரான கள்ளுக்கடை மேடு ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்த ஆறுமுகம் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.