தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா இன்று கூறுகையில்,

Advertisment

"கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடரட்டும். மேலும் அத்தியாவசியப் பொருள்களுக்காக மக்கள் தினந்தோறும் காய்கறி கடை மற்றும் இறைச்சி கடைகளிலும் அரசுகளால் வரையறுக்கப்பட்ட வரைமுறைகளை மீறி ஒருவரோடு ஒருவர் உரசி கொண்டுஅத்தியாவசியப் பொருள்கள்வாங்குவதை மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் நாள்தோறும் திறந்து வைக்காமல் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மட்டுமே திறந்து வைக்க வேண்டும்.

Advertisment

 Prohibit meat shops ... Yuvraj

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதேபோல் தேவை இருப்பின் நடமாடும் காய்கறி கடைகளை அரசு சார்பில் பொதுமக்களுக்கு வீட்டிற்கே கொண்டு சென்று கிடைக்குமாறு ஏற்பாடுகள் செய்ய அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு அரசு உத்தரவிட வேண்டும். இறைச்சி கடைகளை ஊரடங்கு உத்தரவு முடியும் வரை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனுமதிக்க படக்கூடாது.

Advertisment

அதேபோல்,பெட்ரோல் பங்குகள் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றி கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் ,டீசல் நிரப்புவதற்கு அனுமதி அளிக்கவேண்டும். மேலும் மிகவும் அதிகமாக கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கின்ற மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளை மேலும் மேலும் அரசு விரிவுபடுத்த வேண்டுமென த.மா.கா இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.

பெரும்பாலான மக்கள் இறைச்சி சாப்பிட்டு பழகியவர்கள். தற்போது ஊரடங்கு உள்ள நிலையில் மக்கள் தங்களது வீடுகளிலேயே உள்ளனர். இந்த நிலையில் இறைச்சி கடைகளை தடை செய்தால் மக்களின் உணவு பழக்கத்திற்கு எதிரான தாக போய்விடும் என்ற கருத்தும் சமூக ஆர்வலர்களிடம் உள்ளது.