அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகை வழங்க வேண்டும், தினக்கூலி தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பேராசிரியர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் நிர்வாகிகள் பேராசிரியர்கள் சி. சுப்பிரமணியன், அசோகன், முத்து வேலாயுதம், செல்லபாலு, தனசேகரன், காயத்ரி, பரணி, ஜான் கிறிஸ்டி உள்ளிட்ட கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். 

அப்போது பல்கலைக்கழக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆராய்ச்சி படிப்புக்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும். 2 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பயன்களையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.