Advertisment

தனியார் பொறியியல் கல்லூரியின் நடவடிக்கையை கண்டித்து பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

Professors struggle against the action of the private engineering college

Advertisment

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருகேதியாகராஜா பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு சுயநிதி பிரிவில் பணிபுரியும் 8 பேராசிரியர்களைக் கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்ததைக்கண்டித்து மூட்டா மற்றும் டான்செக் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த மூன்று ஆண்டுகளில் 44 பேர் கல்லூரியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி 8 பேரை பணி நீக்கம் செய்து அவர்களுக்கு மூன்று மாத சம்பளம் மட்டும் நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டித்து மூட்டா மற்றும் டான்செக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்த 8 பேரையும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டுகளில் பணியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

engineering college madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe