ADVERTISEMENT

பேராசிரியரின் பாலியல் தொந்தரவு. – நீதிக்கிடைக்காதா என மாணவி கண்ணீர்

07:14 AM Sep 04, 2018 | raja@nakkheeran.in


திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவி ஒருவர், தன்னை இணை பேராசிரியர் தங்கபாண்டியன், உதவி பேராசிரியர்களாகவும் பெண்கள் விடுதி வார்டன்களாகவும் உள்ள புனிதா, மைதிலி இருவரும் பாலியல் ரீதியாக தொந்தரவு தந்தார்கள் என 15 தினங்களுக்கு முன்பு புகார் தெரிவித்தார்.

ADVERTISEMENT


இந்த வழக்கை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் காவல்துறை என இரண்டு தரப்பும் விசாரித்து வருகிறது. இரு விசாரணை அமைப்புகளும் முதலில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ – மாணவிகளிடம் விசாரித்த பின்பே குற்றம்சாட்டிய மாணவியிடம் விசாரணை நடத்தி வித்தியாசப்படுத்தியது. என்னை விசாரித்த ஏ.டி.எஸ்.பி வனிதாவிடம் ஆடியோ உட்பட கூடுதல் ஆவணங்கள் வழங்கியுள்ளேன், இருந்தும் அவர்கள் என்னையே குற்றவாளிபோல் விசாரிக்கிறார்கள் என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ADVERTISEMENT


இந்நிலையில் பல்கலைகழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் பேரா.சாந்தி தலைமையில் 5 பெண் பேராசிரியர்கள் கொண்ட குழு செப்டம்பர் 3ந்தேதி விசாரணைக்கு வாழவச்சனூர் கல்லூரிக்கு வந்தது. கல்லூரியில் வைத்து பேராசிரியர்கள் மீது குற்றம்சாட்டிய மாணவியிடம் மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 வரை விசாரணை நடத்தியது. அதுப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பேரா.சாந்தி, அம்மாணவி கூறிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்துக்கொண்டோம். இதுப்பற்றிய அறிக்கையை துணைவேந்தரிடம் வழங்குவோம், முடிவு அவர்கள் தான் எடுப்பார்கள் என்றார்.


விசாரணையை எதிர்க்கொண்ட மாணவி பேசும்போது, விசாரணையின் போது அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன். அதற்கான ஆவணங்கள் வழங்கினேன். என்னை வேறு கல்லூரி மாறிக்கொள் என்றார்கள், நான் இந்த கல்லூரியில் தான் படிப்பேன் எனச்சொல்லியுள்ளேன் என்றார்.


அந்த மாணவி கூறிய புகாரை கிடப்பில் போட்டு, விவகாரத்தை அமுக்க காவல்துறை, பல்கலைக்கழகம் இரண்டு தரப்பும் முடிவு செய்துள்ளதாக அவர்கள் நடவடிக்கை மூலம் தெரிகிறது என்கிறார்கள் அம்மாணவிக்கு பக்க பலமாக உள்ளவர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT