Professor who rehabilitated 9 brain dead people in Kattumannarkovil

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஜெயராம் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் வள்ளல்பெருமான் (42 ) இவர் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணி புரிந்து வந்தார்.

Advertisment

இவரது மனைவி சுமதி சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இவர் கடந்த புதன்கிழமை( பிப்.15) இரவு தனது இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னார்கோவில் கடை வீதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி பலத்த அடிபட்ட நிலையில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisment

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இதனைத் தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து 4 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சனிக்கிழமை மூளைச்சாவு அடைந்தார். இதுகுறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் மருத்துவர்கள் விவரித்தனர். இதனையடுத்து அவரது மனைவி சுமதி உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தார்.

அதன்படி, கல்லீரல், சிறுநீரகம், கண், இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக பாண்டிச்சேரி,சென்னை ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் 9 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது. மூளைச்சாவு அடைந்து 9 பேருக்கு மறுவாழ்வு அளித்த அவரின் குடும்பத்தினரை மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டினர். இதனையெடுத்து ஞாயிற்றுக்கிழமை ஜெயராம் நகரில் இருந்து அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் அனைத்து தரப்பினரும் திரளாகக் கலந்து கொண்டனர். பின்னர் ஜெயராம் நகருக்கு உட்பட்ட மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisment