கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு நடத்தி செல்லும் போக்கில் பேசிய பேராசிரியர் நிர்மலாதேவியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியைநிர்மலாதேவி கல்லூரி மாணவிகள் நால்வரிடம்பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தும் வகையில், தவறான முறையில் பேசிய ஆடியோ வெளியாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு நேற்று கைதுசெய்யப்பட்டு விடிய விடிய போலீசார் விசாரித்து வந்தனர்.
இதன் அடுத்தகட்டமாக இந்த வழக்கு தொடர்பாகஅவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மூன்று செல்போன்களில்பல்வேறு பெண்களின் புகைப்படங்கள் இருப்பதுதெரியவந்துள்ளது.
இதில் மேலும் ஒரு புது திருப்பமாக இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றடிஜிபிராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.