தலையில் கடனை ஏற்றிய ஆன்லைன் ரம்மி-ரயில் முன் பாய்ந்த பேராசிரியர்

Professor jumps in front of train :online rummy train with debt on his head

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த கல்லூரி பேராசிரியர் ரயில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சித்தேரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ளது சித்தேரி கிராமம். இந்த பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர்நீண்ட நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபாடு கொண்டு விளையாட்டு வந்துள்ளார். இந்த விளையாட்டின் மூலம் 25 லட்சம் ரூபாய் பணத்தை அவர் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாமல் திண்டாடி வந்த பேராசிரியர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.ஒரு கட்டத்தில் வீட்டையும் நகைகளையும் அடமானம் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் கடன் தொல்லையால் தவித்து வந்த பேராசிரியர் சித்தேரி ரயில் நிலையத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலைக் கைப்பற்றிய காட்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

arakkonam online rummy railway station ranipet
இதையும் படியுங்கள்
Subscribe