
சிதம்பரத்தைச் சேர்ந்த பாலச்சந்தர் இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் வெள்ளிக்கிழமை இரவு காசுக்கடை தெருவில் உள்ள வேல்முருகன் என்பவர் மளிகை கடைக்கு சென்று உள்ளார். அப்போது இவர் குழந்தைகளுக்கு தேவையான தின்பண்டங்களை வாங்கி உள்ளார். கடைக்காரர் இதற்கு காசு கேட்டபோது காலையில் தருகிறேன் எனக் கூறியுள்ளார். கடைக்காரர் இப்போதே கொடுங்கள் எனக் கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டுக்கு சென்ற பாலச்சந்தர் வீட்டில் இருந்த காரை எடுத்து வந்து கடை மீது ஏற்றியுள்ளார்.
அப்போது கடையில் இருந்தவர்கள் கார் கடையின் உள்ளே வருவதைக் கண்டு கூச்சலிட்டு ஓடியதால் அங்கு அசம்பாவிதம் நடைபெறவில்லை. பின்னர் அங்கிருந்தவர்கள் காரில் வந்த பாலச்சந்தரை மடக்கி பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கார் கடையின் உள்ளே மோதியதால் பாலச்சந்தருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சிதம்பரம் காவல்துறையினர் விசாரித்தபோது காவல்துறையினரை மரியாதை இல்லாமல் பேசி உள்ளார். அவர் மீது 9 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மறைந்த அதிமுக பிரமுகர் பாண்டியன் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.