producer tr

திரைப்பட இயக்குநர் தேனப்பன் தூண்டுதலின் பெயரில் எஸ்.என். மீடியா தன்னிடம் காப்புரிமை இருப்பதாக கூறுவதை எதிர்த்து காவல் ஆணையாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இன்றைக்கு நாட்டில் உள்ள நிலவரம் என்னவென்றால் யார் எவ்வளவு குற்றமும், தவறுகளும் செய்து விடலாம். யாரும் குற்றம் புரிவதற்கும் தவறு செய்தவற்கும் அஞ்சுவதில்லை. ஏனென்றால் குற்றம் புரிவதற்கு முன்பே அந்த குற்றத்திலிருந்து எப்படி யார் மூலம், எவ்வளவு செலவு செய்து, எவ்வளவு காலத்தில் விடுபட்டு விடலாம் என்று பலருடன் பேசி முடிவெடுத்த பின் தான் அவர்கள் குற்றம் செய்கிறார்கள்.

Advertisment

என்னுடைய சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம்தான் சட்ட ரீதியாக, மன்மதன் மற்றும் வல்லவன் படங்களின் இந்தி மற்றும் வடமாநில மொழிகளின் டப்பிங் உரிமையை பெற்றுள்ளது. ஆனால் தயாரிப்பாளர் தேனப்பன் தூண்டுதலின் பேரில் எஸ்.என்.மீடியா உரிமையாளர் சஞ்சய்குமார் லால்வானி ஆகிய இருவரும் இரண்டு படங்களின் டப்பிங் உரிமை சம்ந்தமாக கலப்படமற்ற பொய்யையும் உண்மைக்கு புறம்பான விளம்பரங்களையும் சினிமா பத்திரிகையில் வெளியீடு செய்கிறார்கள். அதுவும் வழக்கறிஞர்களின் பெயர்களே தவறாக பயன்படுத்தி, அதற்காக நான் காவல் ஆணையர் அவர்களை சந்தித்து புகார் கொடுத்துள்ளேன் என தெரிவித்தார்.