Advertisment

தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு நிபந்தனை ஜாமீன்! 

Advertisment

Producer Singaravelan gets conditional bail

பண மோசடி செய்ததாக நடிகர் விமல் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

Advertisment

மன்னர் வகையறா பட தயாரிப்பு தொடர்பாக, தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது கடந்த 2020- ஆம் ஆண்டு நடிகர் விமல் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் பணமோசடி புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில், சிங்காரவேலன் கடந்த ஏப்ரல் 26- ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிங்காரவேலன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதை எதிர்த்து, இடையீட்டு மனுதாரராக நடிகர் விமல் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கௌதம், பிணையில் வெளி வந்த மூன்று நாட்களில் விமல் தொடர்பான ஆவணங்களை அவரிடமே திருப்பித் தர உத்தரவிட்டு, சிங்காரவேலனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், விமலுக்கு எதிரான பொய் புகார்களை ஏழு நாட்களுக்குள் திரும்பப் பெற உத்தரவிட்ட நீதிபதி, ஒரு வாரத்தில் நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் ஜாமீன் ரத்தாகிவிடும் என்று குறிப்பிட்டார்.

vimal
இதையும் படியுங்கள்
Subscribe