உத்தமவில்லன் பட வெளியீட்டின் போது, தன்னிடம் வாங்கிய 10 கோடி ரூபாய் பணத்தை நடிகர் கமல்ஹாசன் நான்கு ஆண்டுகள் ஆகியும் திரும்பித் தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

Producer Gnanavel Raja Sensational Complaint On Actor Kamal Haasan

கடந்த 2015- ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உத்தமவில்லன் படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இந்நிலையில் நான்கு ஆண்டுகள் ஆகியும், தமது படத்தில் நடிக்க கமல் முன் வரவில்லை. மேலும் தன்னிடம் வாங்கிய ரூபாய் 10 கோடியை அவர் திருப்பி தரவில்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார், திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.