Producer of 'Azhagiya Tamilmagan' jailed in SA Chandrasekhar case

Advertisment

நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், 'அழகிய தமிழ்மகன்' திரைப்படத் தயாரிப்பாளர் அப்பச்சனுக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை விதித்து, சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2007- ஆம் ஆண்டு, விஜய் நடிப்பில் வெளியான 'அழகிய தமிழ்மகன்' திரைப்படத்தை ஸ்வர்க்க சித்ரா தயாரிப்பு நிறுவன உரிமையாளர் அப்பச்சன் தயாரித்திருந்தார். இப்படத்தின் வெளியீட்டுக்காக, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் 15 நாளில் திருப்பித் தருவதாகக் கூறி அப்பச்சன், ஒரு கோடி ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார்.

இந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கும் வகையில், அப்பச்சன் கொடுத்த காசோலை வங்கி கணக்கில் பணமில்லாமல் இரண்டு முறை திரும்பி வந்ததாகக் குற்றம் சாட்டி, எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் அப்பச்சன் மீது கடந்த 2008-ஆம் ஆண்டு, சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்குத் தொடர்ந்தார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்ராஜ், ஸ்வர்க்க சித்ரா தயாரிப்பு நிறுவன உரிமையாளர் அப்பச்சனுக்கு 3 மாத சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். ஒரு கோடி ரூபாயை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.