திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியன் மகள் திருமணம், இன்று திருவான்மியூர் ராமச்சந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் நடிகர்கள் ரஜினி, எஸ்.வி.சேகர், நகைச்சுவை நடிகர் செந்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் உதயக்குமார், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர். அதேபோல், நக்கீரன் ஆசியரும் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.