டாஸ்மாக் கடைகளில் விரைவில் கணினி மூலம் ரசீது வழங்கப்படலாம் எனத்தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைக் காலமாகவே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகத்தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.
இந்த நிலையில் இதுபோன்ற பிரச்சனைகளைத்தவிர்க்கத்தமிழக அரசு டாஸ்மாக்கைகணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரெயில்டெல் நிறுவனத்திற்கு ரூ.294 கோடி மதிப்பிலான ஆர்டரை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் கணினி மயமாக்கப்பட உள்ளன. மேலும் வாங்கும் மதுபானத்திற்கு ரசீது வழங்கும் நடைமுறையையும் விரைவில் கொண்டு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.