Advertisment

தமிழகத்தில் நீதிமன்றங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்! -நிர்வாகக்குழுவின் உத்தரவுகளும் அறிவுறுத்தல்களும்..

court

Advertisment

நாளை, 24-ஆம் தேதி முதல், இரண்டு நீதிபதிகள் கொண்ட 2 அமர்வுகள் மற்றும் 5 தனி நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள்.

மிகவும் அவசரமாக விசாரிக்கக்கூடிய மனுக்களை மட்டுமே வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவு இல்லாமல் வழக்காடிகளை நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் அழைத்து வரக்கூடாது.

சுழற்சி முறையில் நீதிமன்ற ஊழியர்களைப் பணியமர்த்த தலைமை பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கீழமை நீதிமன்றங்களில் மக்கள் நடமாட்டம் குறித்த கண்காணிப்பை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்.

Advertisment

மாவட்ட கீழமை நீதிமன்றங்களிலும் சுழற்சி முறையில் நீதிமன்ற ஊழியர்களைப் பணியமர்த்த மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கீழமை நீதிமன்றங்களில் இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிப்பு கேமரா மூலம் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும். நிர்வாகக் குழுவின் இந்த உத்தரவை உள்ளூர் நிலையின் அடிப்படையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி முடிவெடுத்து அறிவித்துக் கொள்ளலாம்.

இந்த நடைமுறைகளை 3 வாரத்திற்கு செயல்படுத்த தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது.

board courts executive Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe