குடியால் வரும் பிரச்சனைகள் - எடுத்து சொன்ன இளைஞர்; கண்டுகொள்ளாத குடிமகன்கள்

Problems caused by drinking; The young man who took it; Oblivious citizens

ஒரு டாஸ்மாக் கடையில் பரபரப்பாக மது குடிப்போர் முண்டியடித்துக் கொண்டு மதுபானங்களை வாங்கிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் இளைஞர் ஒருவர் மதுவால் ஏற்படும் தீங்குகளை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெளியாகியுள்ள அந்த வீடியோவில், டாஸ்மாக் கடைவாயிலில் மது வாங்கிச்செல்வோரை நோக்கி, ''நீங்கள் குடிப்பதால் உங்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல. உங்கள் குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் சேர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. அநேக குழந்தைகள் படிக்கும்பொழுதே பெற்றோர்களை இழக்கிறார்கள். அவர்களுடைய கல்வி கேள்விக்குறியாகிறது. அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. சின்ன வயதிலேயே அநேக பேரின் மனைவிகள் விதவையாக்கப்படுகிறார்கள். குடிப்பழக்கத்தினால் பல பிரச்சனைகள் வருகிறது. அந்த குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வர வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், நாங்கள் கொடுக்கும் நோட்டீஸில் உள்ள நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள். இலவசமாக உங்களுக்கு ஆலோசனை கொடுத்து இந்த பழக்கத்திலிருந்து உங்களை வெளியே கொண்டு வருகிறோம். தயவு செய்து குடித்து குடித்து வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்'' என்றார்.

சிலர் இதனை செவிகொடுத்து கேட்டாலும் மறுபக்கம் மதுப்பிரியர்கள் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் மதுபானங்களை வாங்கிக் கொண்டு சென்றது தான் கொடுமையின்உச்சம்.

awarness TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe