Advertisment

இரும்பு திருடுவதில் ஏற்பட்ட பிரச்சனை... சக நண்பரை கொன்றவர் கைது!

The problem of stealing iron... police investigation

Advertisment

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த தெற்கு வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்வளவன் என்பவரின் மகன் ஆகாஷ். 21 வயதுடைய இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகனான ஆகாஷ் உடன் சேர்ந்து இரும்பு திருடி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரும்பு திருடுவதில் பிரச்சனை ஏற்பட்டதால் பிரகாஷ் மகன் ஆகாஷ் என்பவர், தமிழ்வளவன் என்பவரின் மகன் ஆகாஷை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊமங்கலம் காவல்துறையினர், உயிரிழந்த ஆகாஷின் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குபிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஆகாஷை கொலை செய்த குற்றவாளியை ஊமங்கலம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரும்பு திருடுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் சக நண்பனை குத்திக் கொன்ற சம்பவம் நெய்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

incident Cuddalore police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe