Advertisment

தீபா - மாதவன் - ராஜா ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் - வேடிக்கை பார்த்த பொதுமக்கள்

Deepa

தீபா வீட்டினுள் உள்ள ராஜாவிடம் சமாதானம் பேசும் போலீசார்

Advertisment

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை தொடங்கினார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. பேரவை தொடங்கியதுமே உறுப்பினர் சேர்க்கைக்கு பணம் வாங்கியதாக பிரச்சனை எழுந்தது. மேலும் பல இடங்களில் பேரவை ஆரம்பித்த கையோடு கலைக்கப்பட்டது. இதனிடையே கட்சியில் ராஜாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை எதிர்த்த மாதவன், உடனே தனி கட்சியை தொடங்கினார்.

deepa

தீபா - மாதவன் - ராஜா ஆகியோரிடையே வீட்டுக்கு வெளியே வாக்குவாதம்

சில மாதங்கள் கழித்து ராஜாவை பேரவையிலிருந்து நீக்கிய தீபா, பின்னர் சில நாட்கள் கழித்து நல்ல பதவி கொடுத்து பேரவையில் இணைத்துக்கொண்டார். இதுபோல பல தடவை நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து மீண்டும் இவர்கள் மூவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாதவன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

Advertisment

Deepa

தீபா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

இந்நிலையில் இன்று தீபா வீடு அமைந்துள்ள தியாகராயர் சிவஞானம் தெருவில் தீபா வீட்டுக்கு ராஜா, தனது தயார் மற்றும் மனைவியுடன்வந்துள்ளார். அப்போது மாதவன், தீபா ஆகியோர் இங்கு உனக்கு என்ன வேலை என்று கேட்டுள்ளனர். அப்போது தீபா- மாதவன்- ராஜா இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது ராஜா, நான் மேலே குடியிருக்கும் தீபக்கை சந்திக்க வந்தேன். தீபக் எனது நண்பர் என்று கூறியுள்ளார்.

deepa

தீபா வீட்டிலிருந்து வெளியே வந்த ராஜா ஆட்டோவில் சென்றார்

அவர்கள் ஒருவருக்கொருவர் திட்டிக்கொள்ளும் சத்தம் வெளியே நின்றிருந்த பொதுமக்களுக்கு கேட்டது. இதனை அப்பகுதி மக்களும், அந்த வழியே சென்றவர்களும் நின்று வேடிக்கை பார்த்தனர். பின்னர் இதனை அறிந்த போலீசார் தீபா வீட்டுக்கு சென்றனர்.

மூன்று பேரையும் போலீசார் சமாதானம் செய்தனர். சிறிது நேரம் கழித்து தீபா வீட்டில் இருந்து வெளியே வந்த ராஜா, தனது தாயாருடன் ஒரு ஆட்டோவை பிடித்து சென்றார். தற்போது தீபா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The problem of Deepa - Madhavan - Raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe