Problem for college student in Nandampakam; Youth arrested

Advertisment

சில வருடங்களுக்கு முன்புசுவாதிஎன்றஇளம்பெண்நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் அண்மையில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் தண்டவாளத்தில் கல்லூரி மாணவி தள்ளப்பட்டு இளைஞர் ஒருவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்போது நந்தம்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டுத்தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை நந்தம்பாக்கம் ஏழுகிணறு தெருவில் மாணவியைக் கத்தியால் குத்தி விட்டுத்தப்பி ஓடி வீட்டின் மாடியில் பதுங்கிய நவீன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த கல்லூரி மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். என்ன காரணத்திற்காக இளைஞர் மாணவி மீது தாக்குதலில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கத்திக் குந்து சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.