Advertisment

பைக் டாக்சிகளுக்கு சிக்கல்? - போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு!

A problem for bike taxis  Transport department action order

தமிழகத்தில் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்துவோர் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்பது விதியாக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இரு சக்கர வாகனத்தை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதாகத் தொடர்ந்து போக்குவரத்துத் துறைக்குப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் சாலை போக்குவரத்து சங்கம் சார்பில், போக்குவரத்துத் துறை ஆணையருக்குப் புகார் ஒன்று நேற்று (10.12.2024) அளிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் விதிகளை மீறி வணிக நோக்கத்திற்காக இயக்கப்படும் இருசக்கர வாகனங்களைக் கண்டறியச் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள போக்குவரத்துத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை மண்டல அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்குப் போக்குவரத்துத் துறை ஆணையர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் பைக்குக்களை இன்று (11.12.2024) முதல் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் இரவு ஒவ்வொரு நாளும் வாகன தணிக்கை மேற்கொண்டதற்கான அறிக்கையை, இரவு 7 மணிக்குள் அளிக்கும்படியும் அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி இருசக்கர வாகனங்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தியது உறுதியானால் அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

penalty fine taxi Transport
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe