Skip to main content

ஒரு சீமைக் கருவேலங் கன்றுக்கு இவ்வளவு பரிசுத்தொகையா... சீமைக் கருவையை அழிக்க இளைஞர்களின் அதிரடி திட்டம்!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

சீமைக் கருவேல மரங்களால்தான் தமிழ்நாடு இப்படி வறட்சியில் சிக்கித் தவிக்கிறது. நிலத்தடி நீரையும், காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் இந்த சீமைக் கருவேல மரங்கள் உறிஞ்சிக் குடிக்கிறது. அதனால் நாளுக்கு நாள் தண்ணீர் குறைந்து நிலத்தடி நீர் மட்டம் கீழே சென்று கொண்டிருக்கிறது. அதனால் இந்த மரங்களை வேரோடு அழிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னது. சொன்ன வேகத்தில் ஆங்காங்கே அழிப்பு நடவடிக்கைகளும் நடந்தது.

 

Rs. 3 prize .. Youth Action Plan to Destroy Gourmet Tree


புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உயர்நீதிமன்ற நீதிபதிகளே நேரடியாக பார்வையிட்டு மாவட்ட நிர்வாகத்தை வேகப்படுத்தினார்கள். அதன் பிறகு அதற்கும் ஒரு தடை விழுந்தது. அதன் பிறகு சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு குறைந்து வருகிறது. அதனால் மீண்டும் அதிகமாக வளரத் தொடங்கிவிட்டது. இந்நிலையில்தான் தற்போது தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டுகளைவிட கூடுதலாகவே பெய்து இளைஞர்கள் முயற்சியில் சீரமைக்கப்பட்ட குளம், ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. ஆனால் சீமைக் கருவேல மரங்கள் அந்த தண்ணீரையும் குடித்துவிடுமோ என்ற அச்சம் இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

Rs. 3 prize .. Youth Action Plan to Destroy Gourmet Tree


இந்நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கு கீழே சென்றுவிட்டதால் மீண்டும் நிலத்தடி நீரை மீட்க வேண்டும் என்று இளைஞர்கள் இணைந்து கிராமத்தில் உள்ள குளம், குட்டை, வரத்து வாய்க்கால்களை சொந்த செலவில் சீரமைத்து தற்போதைய மழையில் உடைப்புகளையும், அடைப்புகளையும் சரி செய்து தண்ணீரை நிரப்பி வருகின்றனர். மேலும் பனைவிதை விதைப்பு, மரக்கன்றுகள் நடுதல் போன்ற நற்பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தின் அடுத்த முயற்சியாக கிராமத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அழித்து சீமைக் கருவை இல்லாத கிராமமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சீமைக் கருவேலங் கன்றை பிடிங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு ரூ. 3 பரிசு வாங்கிச் செல்லலாம் என்று அறிவித்தனர். அறிவிப்பை தொடர்ந்து கிராமத்தில் உள்ள இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் சீமைக் கருவேலங் கன்றுகளை தேடிப் பிடித்து பிடிங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு கன்றுக்கு ரூ. 3 வீதம் எண்ணிக்கைக்கு ஏற்ப பரிசு தொகையை பெற்றுச் செல்கின்றனர். வாங்கப்படும் சீமைக் கருவேலங்கன்றுகளை தீ வைத்து எரித்து அழித்து வருகின்றனர்.

 

Rs. 3 prize .. Youth Action Plan to Destroy Gourmet Tree

 

இதுகுறித்து இளைஞர்கள் கூறும்போது... சீமைக் கருவேல மரங்களாலும் தைல மரங்களாலும் ஒட்டுமொத்த நீர் ஆதாரத்தையும் இழந்து வருகிறோம். ஒவ்வொரு இடமாகச் சென்று அழிப்பது சிரமமாக உள்ளது. அதனால் பரிசுத் திட்டத்தை அறிவித்து இளைஞர்களையும், மாணவர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறோம். அவர்களும் பரிசுக்காக இல்லாமல் அடுத்த தலைமுறை வாழ தண்ணீர் வேண்டும்  என்ற நல்ல நோக்கத்தோடு சீமைக் கருவேலங் கன்றுகளை வேரோடு பிடிங்கி வந்து கொடுக்கிறார்கள். இப்படித்தான் சீமைக் கருவேல மரங்களை அழிக்க முடியும். விரைவில் எங்கள் கிராமம் சீமைக் கருவேல மரங்கள் இல்லாத கிராமமாக மாறும் என்பதில் பெருமையாக உள்ளது. மேலும் அதேபோல தைல மரங்களையும் அழிக்க தனியார் தோட்டக்காரர்களையும் வலியுறுத்தி வருகிறோம். சிலர் தங்கள் தோட்டங்களில் உள்ள தைல மரங்களை அழித்துள்ளனர். மற்ற விவசாயிகளும் அழித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் அரசாங்கமே தற்போது தைல மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு மானிய விலையில் கொடுத்து வருவதாக கூறுகிறார்கள். நாங்கள் மண்ணையும் மக்களையும் காக்க நினைக்கிறோம்.. ஆனால்..? என்றனர்.

முன்மாதிரி கிராமமாக கொத்தமங்கலம் மாறும் என்பதில் சந்தேகமில்லை. இளைஞர் மன்றத்தினருக்கு பாராட்டுகள்.

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.