Advertisment

தடகள வீரர் மாரியப்பனுக்கு அரசு வழங்கிய பரிசுத் தொகை; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Prize money awarded by the govt to athlete Mariappan; Fact check team explanation

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டு சாம்பியனாக இருந்த சீன வீரர் டிங் லீரெனை எதிர்த்து இந்திய செஸ் வீரர் குகேஷ் (வயது 18) விளையாடினார். பரபரப்பான 14 சுற்று ஆட்டத்தில் டிங் லீரெனை வீழ்த்தி குகேஷ் அபாரமாக வெற்றி பெற்றார். அதாவது குகேஷ் தனது 58வது நகர்த்திலில் வெற்றி வாகையை சூடினார். இதன்மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.

Advertisment

இதனையடுத்து உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாட் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதே சமயம் குகேஷ்-க்கு 5 கோடி ரூபாய் அறிவித்த தமிழக அரசு தடகள வீரர் மாரியப்பனுக்கு வெறும் வாழ்த்து மட்டும் கூறிவிட்டு பரிசுத் தொகை வழங்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்ப்பட்டது. இந்நிலையில், இதில் உண்மை என்ன? என்று தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற 'ரியோ பாரா ஒலிம்பிக்' தொடரில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.2 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.

Advertisment

அடுத்ததாக, 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற போது தமிழ்நாடு முதல்வர் ரூ.2 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார். மேலும், குரூப்- 1 பிரிவில் மாரியப்பனுக்கு தமிழ்நாடு காகித நிறுவனத்தின் துணை மேலாளர் பணி வழங்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற போது தமிழ்நாடு முதல்வர் ரூ.75 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்தார். மேலும் 2024ஆம் செப்டம்பர் மாதம் பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக ரூ.1 கோடி பரிசுத் தொகை தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்.

தடகள வீரர் மாரியப்பனுக்கு பரிசுத் தொகை, போட்டிகளில் பங்கேற்றல், மருத்துவ செலவுகள் என சுமார் ரூ. 7.5 கோடி அளவிற்கு தமிழ்நாடு அரசால் உதவிகள் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) தெரிவித்துள்ளது. ஆனால், தடகள வீரர் மாரியப்பனுக்கு முதல்வர் வாழ்த்து மட்டுமே கூறியதாக இனரீதியான வதந்திகள் பரப்பப்படுகிறது.

Prize money awarded by the govt to athlete Mariappan; Fact check team explanation

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தரப்பில், 07.05.2021 முதல் 30.11.2024 வரை சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகள் உள்ளிட்ட 3,345 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.104.22 கோடி உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் 585 விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும், உயர்நிலைப் போட்டிகளில் பங்கேற்றல் மற்றும் மருத்துவச் செலவு உட்பட பல்வேறு செலவினங்களுக்கும் ரூ. 13.33 கோடி வழங்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PRIZE mariyappan gukesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe