Skip to main content

கிராம சபையில் கலந்து கொண்டால் பரிசு.. கிராம ஊராட்சியின் அசத்தல் அறிவிப்பு...!

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

கிராம ஊராட்சிகளின் அடிப்படை கட்டுமானமாக திகழ்வது கிராம சபை தீர்மானங்கள். ஊராட்சியின் வளர்ச்சி, கிராமங்களின் தேவை, கிராம மக்களின் தேவைகளை கிராம சபை தீர்மானங்களாக இயற்றி நிறைவேற்றப்பட்டு வருகிறது. நீதிமன்றங்களில் கூட இந்த தீர்மானங்களுக்கு சிறப்பிடம் உண்டு.

Prize for attending the Gram Sabha

ஆனால் கடந்த 2016க்கு பிறகு நடந்த கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்களால் கொண்டுவரப்பட்ட கோரிக்கைகள் கிராம சபை தீர்மான நோட்டுகளில் எழுதப்படாமல் கோரிக்கை மனுக்களாகவே காணாமல் போய்விட்டது. ஆனாலும் கடந்த சில வருடங்களாக இளைஞர்கள் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஊராட்சியின் வரவு, செலவுகள் பற்றி கேட்டு வருவதுடன் ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற நாசகார திட்டங்களுக்கு எதிராகவும் தீர்மானங்களை கொண்டு வர மனுக்களாக கொடுத்தனர். சில ஊராட்சிகளில் தீர்மான நோட்டுகளில் எழுதப்பட்டாலும் பல கிராமங்களில் எழுதப்படாமல் உள்ளது. 

இந்த நிலையில் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் பதவி ஏற்ற பிறகு நடக்கும் முதல் கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26ஆம் தேதி நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் மக்கள் அதிகம் கலந்து கொள்ள வேண்டும் என்பதே புதிய உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் எண்ணமாக உள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் நடக்க உள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்பதற்காக புதிய ஊராட்சி நிர்வாகம் அசத்தலான பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது. 

அதாவது கிராம ஊராட்ச்சியின் வளர்ச்சிக்காக கிராம சபைக் கூட்டத்திற்கு வந்து சிறந்த ஆலோசனைகளை சொல்லும் 3 பேருக்கு பரிசு வழங்கும் திட்டம், அதே போல கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் பெயர்களை எழுதி குலுக்கல் முறையில் தோ்வு செய்து 10 பேருக்கு பரிசு வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்திற்கு கிராம மக்களை இழுத்து வர இப்படி ஒரு அசத்தலான பரிசுத்திட்டத்தை அறிவித்திருப்பது மக்களிடம் பரபரபாக உள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயி தாக்கப்பட்ட விவகாரம்; ஊராட்சி செயலருக்கு ஜாமீன்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

A case where the farmer was issue Bail to Panchayat Secretary

காந்தி ஜெயந்தியன்று தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் கடந்த 2 ஆம் தேதி (02.10.2023) கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கங்காகுளம் என்ற கிராம ஊராட்சியிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின் போது விவசாயி ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அப்போது அங்கிருந்த கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பிய விவசாயியை எட்டி உதைத்தார். அதே சமயம் கூட்டத்தில் இருந்த ராசு என்பவரும் விவசாயியின் கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ மக்கள் மத்தியில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட இருவர் மீதும் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின் பேரில், கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை சஸ்பெண்ட் செய்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இந்த சூழலில் தலைமறைவாக இருந்த ராசுவை தனிப்படை போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தாக்குதலுக்கு உட்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் இல்லை என்பதால் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்து  முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

Next Story

விவசாயி தாக்கப்பட்ட விவகாரம்; தனிப்படை போலீசார் அதிரடி

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

A case where the farmer was Special police in action

காந்தி ஜெயந்தியன்று தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் கடந்த 2 ஆம் தேதி (02.10.2023) கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கங்காகுளம் என்ற கிராம ஊராட்சியிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின் போது விவசாயி ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அப்போது அங்கிருந்த கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பிய விவசாயியை எட்டி உதைத்தார். அதே சமயம் கூட்டத்தில் இருந்த ராசு என்பவரும் விவசாயியின் கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ மக்கள் மத்தியில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட இருவர் மீதும் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின் பேரில், கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை சஸ்பெண்ட் செய்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராசுவை தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.