Advertisment

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கரோனா தடுப்பு வீரர்களுக்கு பரிசு மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா!

Prize and Pledge Ceremony for Corona Defenders at Annamalai University!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் கரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்பு முல்லை இல்லம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் (அலகு16) சார்பில் நடத்தப்பட்டது.

Advertisment

இவ்விழாவில்முல்லை இல்லம் தொடர்பு அதிகாரி முனைவர் வரதராஜன், வரவேற்புரை வழங்கினார். முல்லை இல்லம் விடுதி காப்பாளர் மற்றும் நாட்டு நலப்பணி (அலகு16) திட்ட அலுவலர் முனைவர்.ராஜ்பிரவின், கலந்துகொண்டு பேசுகையில், தற்போது கரோனா பரவலை தடுப்பதில் சமூக இடைவெளி ஒரு சமூக தடுப்பூசியாக செயல்படுவதால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு முறைகள் சிறப்பான பங்கு வகிப்பதாக கூறினார்.

Advertisment

பின்னர் தலைமை உரையாற்றிய அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதிகள் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ராமநாதன் பேசுகையில், கரோனா தடுப்பு பணிகளில் அண்ணாமலை பல்கலைக்கழக அனைத்து விடுதி ஊழியர்களும் சிறப்பான முறையில் கரோனா தடுப்பு வீரர்களாக செயல்பட்டதாகவும், அவர்களின் சீரிய தொடர் செயல்பாடுகளை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும் பல்கலைக்கழக கரோனா தடுப்பு வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கி, கரோன தடுப்பு உறுதி மொழியை அவர் வாசிக்க, முல்லை இல்லம் விடுதி ஊழியர்கள் கரோனா உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இறுதியாக முல்லை இல்லம்சிறப்பு அதிகாரி புனித ராம்ராஜ் நன்றி தெரிவித்தார்.

Annamalai University
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe