'Privatization of state transport corporations?'-EPS condemns

Advertisment

அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கும் வகையில் வெளியிட்ட ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மையமாக்குவதா?' என கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, பதிவு செய்துள்ள 1087 வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். ஓட்டுநர், நடத்துநர் தேர்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்துள்ளோரின் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும். மக்களின் போராட்டங்களை இனியும் திராவிடம் என்றும், சனாதனம் என்றும், சமூக நீதி என்றும் பேசி மடைமாற்றம் செய்துவிடலாம் என்ற தமிழக தமிழ்நாடு முதல்வரின் திட்டம் இனி தமிழகத்தில் எடுபடாது. தொடர்ந்து அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்க துடிக்கும் திமுக அரசு உடனடியாக வெளியிட்டு இருக்கக்கூடிய ஒப்பந்த புள்ளியை ரத்து செய்ய வேண்டும். அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.